வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

வெட்கம்

வெட்கம்

வெட்கமாய் இருக்கின்றது
வெட்கப் படுவதற்கு.
முறைக்காரன் வம்பு செய்த வெட்கமா?- இல்லை
முதல் முறையாய் பெண்ணான வெட்கமா - இல்லை
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்த வெட்கமா? - இல்லை
மனமேடை வெட்கமா? - இல்லை
அட என்னதான் வெட்கப் பட என்கிறீரா?
பெண்ணாய்  பிறந்ததினால்
வெட்கப் படுகிறேன் - தமிழ்
பெண்ணாய் பிறந்ததினால் வெட்கப்படுகிறேன்
ஏனிந்த வெட்ட்கம்?
எதற்காக வெட்கம்?
பெண்ணென்பதால் என் போராட்ட குணம்
ஒடுக்கப்படுகின்றது,
அதனாலா?
இல்லை ,
பெண்ணியம் பேசினோம்
பெண் விடுதலை கேட்டிட்டோம்
ஆணுக்குப் பெண் நிகறேன்றோம்
எல்லாம் சரி கிடைத்ததா?
கிடைத்தது
 பின் ஏன் வெட்க்கம்?
தொலைத்துவிட்டோம்
எப்போதும் போல
தொலைகாட்சி நாடகத்தில்
அலங்கார பொருட்களில்
வீண் பகட்டு பேச்சுக்களில்
மீண்டும் ஒரு முறை அடிமையானோம்
சுதந்திரம் என்ற போர்வையில்
ஆண்களின்  அலங்காரப் பொருளாய்.
தோழியே எழுந்து வா
மீண்டும் ஒரு சாதனை படைப்போம்
சரித்திரத்தை மீண்டும்
மாற்றி எழுதுவோம்.













திங்கள், 24 ஜனவரி, 2011

புது யுகக் காதல்

புது யுகக் காதல் 
 C. S 



என்னென்னவோ மாறியாச்சு
ஏதேதோ வந்தாச்சு
பழசெல்லாம் புதுசாச்சு
புதுசும் இப்போ வெறுத்தாச்சு
மறைச்சு வச்சு மறைச்சு வைச்சு 
இப்போ முழுசும் தெரந்தாச்சு
அப்பா அம்மா மனசெல்லாம்
ஆதங்கத்தில் நிறைஞ்சாச்சு
கேள்வி யாரேனும்  கேட்டாக்க
முகத்தை முறிச்சு பேசியாச்சு
அங்க மறைசு இங்க மறைஞ்சு இப்போ
நடுத்தெருவே தோதாச்சு
S M S  , செல் போன் பில்லு இப்போ  ஏறியாச்சு 
அவசர அவசரமா ஆசைய தீத்தாச்சு
கல்யானத்துக்கு முன்னாடியே 
சுமந்தெடுத்து நாறியாச்சு
என்னத்த சொல்ல  இப்போ
ஏதுன்னு சொல்ல  இப்போ
பிஞ்சு முகமுன்னு அப்பா நினைச்சிருக்க 
நல்ல பிள்ளைன்னு அம்மா கனவிருக்க
பெத்தவங்க ஆசைய 
புதை குழியில தள்ளிட்டு 
நிமிந்து நாங்க பார்த்தாக்க
குழிக்குள்ள நாங்க இருக்க
பெத்தவங்க குத்திகிட்டு 
கை தூக்கிவிட அழுவுறாங்க
அப்பா அம்மா ஆசைய 
சாவடிச்சு வாழ்ந்ததுக்கு தண்டனையா
கை பிடுச்சி ஏறவா? 
கட்டையில வேகவா?


















வெள்ளி, 21 ஜனவரி, 2011

என்னால் முடியும் ,

என்னால் முடியும்

ஷோபனா சின்னதுரை








இந்த பிரபஞ்சத்தின் படைப்பு வேலைக்கு பெண் முக்கியமான பங்கினை 
ஆற்றிவருகிறாள்  .ஆனாலும் பெண் என்பவள் பழங்காலம் தொட்டு ஆண்களால் ஒரு போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறாள் . இந்திய திரு நாட்டில்  எத்தனையோ பெண் தெய்வங்கள்  இருந்த போதிலும்  கோவிலில்   வணங்க  மட்டுமே பெண்கள் தெய்வமாகலாம் . என்றுமே பெண்கள் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் என்கின்ற மனோபாவம் இன்னும் மாறவில்லை. எந்த வேலை செய்வதற்கும் பெண் அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இன்னும் மாறவில்லை.


             சரி என்ன செய்வது இந்தகால பெண்களுக்கு ப்யுடி பார்லர் சென்று த்ரெட்டிங் செய்யவும் பேசியல்  செய்யவும்ம்தான் நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஏதாவது   படிக்கலாம் எழுதலாம் என்றால் முடிவதில்லை. இதனை சொல்வதற்கு ஒரு பெண் என்கின்ற முறையில் எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கின்றது . இதனைப் படித்துவிட்டு யாரேனும் என்னை திட்டவும் கூடும், கண்ணாடி வீட்டுக்குள்  இருந்து கல் எறிவது போலத்தான் இருக்கின்றது என்ன செய்வது நானும் சொல்லவில்லை என்றால் வேறு யார் சொல்வார்கள்?