மூக்கொழுவி

மூக்கொழுவி
சின்ன வயசில
தென்னை மட்ட வண்டில
தெரு புழுதில
முடியெல்லாம் மண்ணாகி
ஒடம்பெல்லாம் அழுக்காகி
அருணாகொடி போட்டும் நிக்காத கால் சட்டை
மாட்டிகிட்டு வளையவந்த
காலங்கள் நினைப்பிருக்கு
எல்லாரும் சேந்து ஒண்ணா
விளையாடும் போது நாங்க
வேண்டாமுன்னு விரட்டிடுவோம்
மூகொழுவி கவிதாவ...
காலம் பல மாறி
காதல் பல தோத்துபுட்டு.,
தாடி வளர்த்து - தாடி எடுத்து
புது காதல் பல தேடி தேடி
கன்னாபின்னான்னு களைசிருக்க
தேவத ஒருத்தி தென்றலா
தாண்டிப் போனா....
யாருடா அவன்னு
காதல சொல்லப் போனா
நெத்தி தழும்பு அவ யாருன்னு சொல்லிடுச்சி..
பருவத்துல பன்னியும் அழகும்பாங்க
இல்லங்க
அவ பருவத்துல
பருவமே அழகா இருந்தது
எப்படி போய் நான் சொல்ல
உன்ன நான் காதலிக்கிறேன்
மூக்கொழு... இல்லை இல்லை.... கவிதான்னு .!

மூக்கொழுவி
சின்ன வயசில
தென்னை மட்ட வண்டில
தெரு புழுதில
முடியெல்லாம் மண்ணாகி
ஒடம்பெல்லாம் அழுக்காகி
அருணாகொடி போட்டும் நிக்காத கால் சட்டை
மாட்டிகிட்டு வளையவந்த
காலங்கள் நினைப்பிருக்கு
எல்லாரும் சேந்து ஒண்ணா
விளையாடும் போது நாங்க
வேண்டாமுன்னு விரட்டிடுவோம்
மூகொழுவி கவிதாவ...
காலம் பல மாறி
காதல் பல தோத்துபுட்டு.,
தாடி வளர்த்து - தாடி எடுத்து
புது காதல் பல தேடி தேடி
கன்னாபின்னான்னு களைசிருக்க
தேவத ஒருத்தி தென்றலா
தாண்டிப் போனா....
யாருடா அவன்னு
காதல சொல்லப் போனா
நெத்தி தழும்பு அவ யாருன்னு சொல்லிடுச்சி..
பருவத்துல பன்னியும் அழகும்பாங்க
இல்லங்க
அவ பருவத்துல
பருவமே அழகா இருந்தது
எப்படி போய் நான் சொல்ல
உன்ன நான் காதலிக்கிறேன்
மூக்கொழு... இல்லை இல்லை.... கவிதான்னு .!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக